< Back
மாநில செய்திகள்
மக்கள் நீதிமன்றத்தில் 28 வழக்குகளுக்கு தீர்வு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மக்கள் நீதிமன்றத்தில் 28 வழக்குகளுக்கு தீர்வு

தினத்தந்தி
|
11 Jun 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 28 வழக்குகளுக்கு தீர்வு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கீதாராணி தலைமை தாங்கினார். கூடுதல் சார்பு நீதிபதி தனசேகரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி முஹமதுஅலி, முதலாவது குற்றவியல் நீதிபதி ஹரிஹரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் காசோலை சம்பந்தமான வழக்குகள் உள்பட மொத்தம் 28 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 74 லட்சத்து 49 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டது. இதில் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்