< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில் நடந்தமக்கள் நீதிமன்றத்தில் 248 வழக்குகளுக்கு தீர்வு
|11 Sept 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 248 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நிதிபதி கீதாராணி தலைமை தாங்கினார். முதன்மை சார்பு நீதிபதி மைதிலி, கூடுதல் சார்பு நீதிபதி தனசேகரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி முஹமதுஅலி, முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுகந்தி, முதலாவது குற்றவியல் நீதிபதி ஹரிஹரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் காசோலை, கடன் சம்பந்தமான வழக்குகள் உள்பட 248 வழக்குகளுக்கு ரூபாய் ஒரு கோடியே 36 லட்சத்து 3 ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது. இதில் வழக்கறிஞர் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் சீனிவாசன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.