< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
மக்கள் நீதிமன்றத்தில் 205 வழக்குகளுக்கு தீர்வு
|10 Sept 2023 2:45 AM IST
பந்தலூர் மக்கள் நீதிமன்றத்தில் 205 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
பந்தலூர்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் லோக் அதாலத் என்று அழைக்கப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. நீதிபதி சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் நிலுவையில் இருந்த 250-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 205 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. குற்றவியல் வழக்குகள் தொடர்பாக ரூ.3 லட்சத்து 92 ஆயிரம், காசோலை மோசடி வழக்குகள் தொடர்பாக ரூ.7 லட்சத்து 88 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டது. இதில் நீதிமன்ற ஊழியர்கள் கலந்துகொண்டனர்.