< Back
மாநில செய்திகள்
ஜமாபந்தி நிகழ்ச்சியில் 117 மனுக்களுக்கு தீர்வு
விருதுநகர்
மாநில செய்திகள்

ஜமாபந்தி நிகழ்ச்சியில் 117 மனுக்களுக்கு தீர்வு

தினத்தந்தி
|
3 Jun 2022 12:46 AM IST

வெம்பக்கோட்டை தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் 117 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் 117 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

ஜமாபந்தி நிகழ்ச்சி

வெம்பக்கோட்டை தாலுகாவில் கடந்த ஒரு வாரமாக ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஜமாபந்தி நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவுநாளான நேற்று கீழராஜகுலராமன், கோபாலபுரம், வரகுணராமபுரம், குறிச்சியார்பட்டி, வடகரை, தென்கரை, கொருக்காம்பட்டி உள்ளிட்ட 27 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை, முதியோர் உதவித்தொகை, விதவை ஓய்வூதியம், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

117 மனுக்களுக்கு தீர்வு

இதில் 117 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மங்கலராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன் முன்னிலை வகித்தார். தனி தாசில்தார் ரங்கசாமி வரவேற்றார். ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்