< Back
தமிழக செய்திகள்

விருதுநகர்
தமிழக செய்திகள்
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

29 March 2023 1:17 AM IST
மோட்டார்சைக்கிளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் உள்ள முருகன் காலனியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 27). இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் முன்பு இரவு நிறுத்தி விட்டு சென்றார். இந்த நிலையில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் கணேஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் மோட்டார் சைக்கிள் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தார். மர்மமான முறையில் மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக யாராவது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு சென்றனரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.