< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

தினத்தந்தி
|
20 Oct 2023 1:56 AM IST

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.

காரியாபட்டி பாண்டியன் நகரை சேர்ந்தவர் முனியசாமி (வயது 27). இவருக்கும் ஜெகஜீவன் ராம் தெருவை சேர்ந்த முனியாண்டிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் முனியசாமி அங்கிருந்து சென்று ஏ.நெடுங்குளம் ஆற்றுப் பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் முனியாண்டி உடன் வந்த 7 பேர் கொண்ட கும்பல் முனியசாமியை தாக்கி காயப்படுத்தி விட்டு அவரது மோட்டார் சைக்கிளை தீ வைத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்துவிட்டது. இதுகுறித்து முனியசாமி அளித்த புகாரின் பேரில் முனியாண்டி உள்பட 7 பேர் மீது காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்