< Back
மாநில செய்திகள்
சேத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சேத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
31 Oct 2022 7:29 PM GMT

சேத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் உள்ள சேத்து மாரியம்மன் கோவிலின் தேர் திருவிழா கடந்த 23-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் திருவீதி உலா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக உற்சவர் சேத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகளுக்கு பிறகு உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார்.

பின்னர் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் சிறுவர்களை நோய் நொடியில் இருந்து காக்க கரும்புள்ளி-செம்புள்ளியிட்டு நூதன நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. தேரினை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக தேர் சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.

இதில் வாலிகண்டபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்