< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சாமனிய மக்களுக்கு சேவை செய்தால் மனநிறைவு கிடைக்கும் - சபாநாயகர் அப்பாவு
|4 Feb 2023 3:26 PM IST
சாமனிய மக்களுக்கு சேவை செய்தால் மனநிறைவு கிடைக்கும் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் ஏர்வாடி முதியோர் புதுவாழ்வு இல்லத்தில் புதிய கட்டடத்தை தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
முதியோர் இல்லங்களில் சேவை செய்வதை பல பேர் பெருமையாக எண்ணுகின்றனர். சொந்த பணத்தை அதற்கு கொடுத்து பெருமைபடுவதோடு மட்டுமில்லாமல் அவர்களும் மனநிறைவு அடைகிறார்கள். சமானிய மக்களுக்கு சேவை செய்து மனநிறைவு அடைந்து அதில் கிடைக்கும் சுகம் அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
மற்றவர்களுக்கு தெரிய நியாயம் இல்லை என்று பேசினார்.