விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் தொடர் திருட்டு
|ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் தொடர்ந்து திருட்டு நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை மாதா நகரை சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று இருந்தார்.திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து 3½பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதேபோல் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள பாட்டக்குளம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். பி்ன்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுைகயில், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பூட்டிய வீட்ைட நோட்டமிட்டு மர்மநபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் ேபாலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தவும், தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.