< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
பள்ளிக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: பிளஸ்-2 மாணவரிடம் போலீசார் விசாரணை
|16 Sept 2022 2:21 PM IST
பொன்னேரியில் பள்ளிக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிளஸ்-2 மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 நாட்கள் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் கடந்த 13 மற்றும் 14-ந் தேதி்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பின்னர் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, அதே பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர் என்பதும், அவர், சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.