< Back
மாநில செய்திகள்
அன்னதான கூடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிவரிசை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

அன்னதான கூடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிவரிசை

தினத்தந்தி
|
18 May 2023 4:46 PM GMT

பழனி முருகன் கோவில் அன்னதான கூடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிவரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இங்கு வாரவிடுமுறை, விசேஷ நாட்களில் அன்னதான வரிசையில் கடும் கூட்டம் காணப்படும். இந்நிலையில் கூட்ட நேரங்களில் அன்னதான கூடத்திற்கு செல்ல மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வந்தனர். எனவே அவர்களுக்கு சிறப்பு அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைக்கருத்தில் கொண்டு தற்போது பழனி கோவில் அன்னதான கூடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. இதேபோல் பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் இடங்களில் அவர்கள் அமருவதற்கு என தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக அங்கு "மாற்றுத்திறனாளிகள் அமரும் இடம்" என குறிப்பிட்டு சுவர்களில் ஒட்டப்பட்டு உள்ளது. இதுதவிர மாற்றுத்திறனாளிகள் எளிதாக பாயாசம் சாப்பிடுவதற்காக டம்ளரில் வழங்கவும், கரண்டி (ஸ்பூன்) வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையை மாற்றுத்திறனாளிகள் வரவேற்று உள்ளனர்.

மேலும் செய்திகள்