< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செந்தில் பாலாஜி வழக்கு நாளை சென்னை ஐகோர்ட்டில் விசாரணை.!
|24 July 2023 8:18 PM IST
செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவை நாளை சென்னை ஐகோர்ட்டு விசாரிக்கிறது.
சென்னை,
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு நாளை சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு முன்பு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
செந்தில் பாலாஜியை எப்போது முதல் அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்பது குறித்து இரு நீதிபதிகள் அமர்வு முடிவுசெய்யும் என 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்திருந்த நிலையில், நாளை இந்த விசாரணை நடைபெறுகிறது.
மேலும், செந்தில் பாலாஜியை எந்த தேதியிலிருந்து காவலில் எடுக்கலாம் என்பது குறித்தும் முடிவு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.