செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா கட்டிவரும் புதிய வீட்டை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை
|செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா கட்டிவரும் புதிய வீட்டை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை,
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், அவரது மனைவி நிர்மலா பெயரில் கட்டி வரும் பிரமாண்ட பங்களா வீட்டில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இரண்டு வாகனங்களில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையை தொடங்கினர்.
சோதனை நடைபெற்ற நிலையில், பங்களா வீடு கட்டுவது தொடர்பான ஆவணங்களுடன் அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அசோக் குமார் மனைவி நிர்மலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் கரூர் புறவழிச்சாலையில் சுமார் 2 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் இந்த புதிய வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 7 மணிநேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் வீட்டை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். புதிய வீட்டை விற்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.