< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
|16 Jun 2023 5:17 PM IST
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை,
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்திய பிறகே செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது.
செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரரும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.