< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி
|12 Feb 2024 9:05 PM IST
அமலாக்கத்துறை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
சென்னை,
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளபோதும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்து வந்தார். அவருக்கு எந்த இலக்காக்களும் ஒதுக்கப்படாமல் இலாக்கா இல்லாத அமைச்சராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி இன்று ராஜினாமா செய்தார். இலாக்கா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.