< Back
மாநில செய்திகள்
செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு

தினத்தந்தி
|
29 Jan 2024 3:59 PM IST

முன்னதாக அமலாக்கத்துறை நடவடிக்கையை நிறுத்தி வைக்கக்கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.

சென்னை,

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், ஜாமீன் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 17-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அமலாக்கத்துறை நடவடிக்கையை நிறுத்தி வைக்கக்கோரி செந்தில் பாலாஜி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பான அந்த மனுவில், குற்றச்சாட்டு பதிவையும் சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மோசடி தொடர்பான வழக்கு மத்திய குற்றப்பிரிவில் உள்ளதால் அமலாக்கத்துறை விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரமுடியாது. செந்தில் பாலாஜியின் மனு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை போன்றது.

வழக்கின் விசாரணையை முடக்கும் நோக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்