< Back
மாநில செய்திகள்
மூத்த குடிமக்கள் அவை கூட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மூத்த குடிமக்கள் அவை கூட்டம்

தினத்தந்தி
|
15 Oct 2023 12:15 AM IST

மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை கூட்டம் நடந்தது

மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அதன் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சையத் உசேன், துணை செயலாளர் கிருஷ்ணசாமி, உறுப்பினர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் ரமணன் வரவேற்றார். கூட்டத்தில், தமிழக அரசு அறிவித்துள்ள, உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்வதை வரவேற்பது, அதேபோல் உடல் தானம் செய்தவர்களுக்கும் அரசு உரிய மரியாதை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்வது, நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசை கண்டிப்பது, புதிய மாவட்டமான மயிலாடுதுறையில் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் உடனே ஏற்படுத்தி தர தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் செயலாளர் தியாகராஜன், பொருளாளர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்