< Back
தமிழக செய்திகள்
செங்கோட்டை ரெயில்கள் இன்று முதல் மின்சார என்ஜினில் இயக்கம்

கோப்புப்படம் 

தமிழக செய்திகள்

செங்கோட்டை ரெயில்கள் இன்று முதல் மின்சார என்ஜினில் இயக்கம்

தினத்தந்தி
|
1 Nov 2023 8:42 AM IST

செங்கோட்டையில் இருந்து புறப்படும் விரைவு ரெயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட உள்ளன.

தென்காசி,

விருதுநகா்-செங்கோட்டை ரெயில்வே பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டன. இதையடுத்து நவம்பா் 1-ந்தேதி(இன்று) முதல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை, சிலம்பு, மயிலாடுதுறை விரைவு ரெயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட உள்ளன.

இதற்காக இந்த பிரிவில் அமைக்கப்பட்ட மின் வழித்தடத்தில் 25,000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட உள்ளது. இந்த மின் வழித்தடத்தை பொதுமக்கள் நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம் எனவும், மழை, மின்னல் நேரங்களில் குடையுடன் மின் வழித்தடத்தின் கீழே நடந்து செல்வது ஆபத்தை விளைவிக்கும் எனவும் ரெயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகள்