< Back
மாநில செய்திகள்
செந்துறை மதுரகாளியம்மன் கோவில் தேரோட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

செந்துறை மதுரகாளியம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
20 May 2022 1:31 AM IST

செந்துறை மதுரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலுப்பையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

மேலும் செய்திகள்