பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு நாளை மீண்டும் விசாரணை
|பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
விழுப்புரம்,
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண்குவாரி வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெயச்சந்திரன், கோபிநாத், சதானந்தன் ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். முன்னாள் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.
மேலும் இவ்வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கோர்ட்டுக்கு வரவழைக்கக்கோரி கவுதமசிகாமணி எம்.பி., ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன் ஆகியோர் தனித்தனியாக மனுதாக்கல் செய்த நிலையில் அதன் மீது அரசு தரப்பு பதிலுரை தாக்கல் செய்வதற்காக இவ்வழக்கு விசாரணை 31-ந் தேதி (நாளை) மீண்டும் நடைபெறும் என மாவட்ட நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.