< Back
மாநில செய்திகள்
மறுபடியுமா....? சென்னைக்கு இன்று  செம்ம ஹாட் டே...! - தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை
மாநில செய்திகள்

மறுபடியுமா....? சென்னைக்கு இன்று செம்ம ஹாட் டே...! - தமிழ்நாடு வெதர்மேன்

தினத்தந்தி
|
2 Jun 2023 10:54 AM IST

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய நகரங்களுக்கு செம்ம ஹாட் டே என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறி உள்ளார்.

சென்னை

தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் கூறி இருப்பதாவது:-

சென்னையில் நேற்றை விட இன்று வெப்பம் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். நேற்று தமிழகத்திலேயே சென்னை மீனம்பாக்கத்தில் வெப்பம் அதிகமாக இருந்ததாக கூறியுள்ள தமிழ்நாடு வெதர்மேன் இன்றும் அதிக வெப்பநிலை நிலவ வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

புறநகர் பகுதிகளில் 42 டிகிரி செல்சியஸை தொட முடியுமா? என்று கேட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் உண்மையான கத்திரி வெயில் ஆன் எனவும் பதிவிட்டுள்ளார்.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய நகரங்களுக்கு செம்ம ஹாட் டே என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேனின் இந்த பதிவை பார்த்தவர்கள் மறுபடியுமா? இன்னும் எத்தனை நாளைக்கு வெயில் இப்படி வாட்டி வதைக்கும் என கேட்டு வருகின்றனர். பலரும் வெயில் குறித்த மீம்ஸ்களை பதிவிட்டு வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.



மேலும் செய்திகள்