< Back
மாநில செய்திகள்
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருத்தரங்கு
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருத்தரங்கு

தினத்தந்தி
|
29 Sept 2023 11:25 PM IST

ஆரணி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருத்தரங்கு நடந்தது.

ஆரணி

ஆரணி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருத்தரங்கு நடந்தது.

ஆரணி அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் கருத்தரங்கு நடந்தது. இதனை வாரியத்தின்கீழ் செயல்படும் இலக்கு மக்கள் பணிகள் திட்டம் ரூரல் சோசியல் வெல் பயர் சொசைட்டி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு இணைந்து நடத்தியது.

ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) நந்தினி தலைமை தாங்கினார். இதில் ஆரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த எச்.ஐ.வி.பாதித்தவர்கள் கலந்து கொண்டனர்.

பாலியல் தொழில் செய்யும் பெண்கள், ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் எச்.ஐ.வி. பரிசோதனையை முறையாக தவறாமல் செய்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் டாக்டர்கள் பால கணேசன், ரமேஷ், மாவட்ட ஐ.சி.டி.சி. மேற்பார்வையாளர் முருகானந்தம், பிரிவு மேற்பார்வையாளர் காஞ்சனா, மோகன் காசநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகள் ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும் செய்திகள்