திருவண்ணாமலை
'பெண் கல்வியும், பாதுகாப்பும்' கருத்தரங்கம்
|தெள்ளாறு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ‘பெண் கல்வியும் பாதுகாப்பும்’ என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த தெள்ளாறு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 'பெண் கல்வியும் பாதுகாப்பும்' என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் தலைமை ஆசிரியர் ஷாயிராபீ தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவர் டி.கே.ஜி.ஆனந்த், கல்வியாளர் பா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இசையாசிரியர் டி.பி.வெங்கடேசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தெள்ளார் சப்-இன்ஸ்பெக்டர் ஏ. சுந்தரமூர்த்தி பங்கேற்று, பெண் கல்வியும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் பேசினார். மேலும் பெண்கள் பல்வேறு நிலைகளில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றியும், அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தன் பரிசுகள் வழங்கினார். முடிவில் உதவி தலைமை ஆசிரியை மீனாட்சி நன்றி கூறினார்.