< Back
மாநில செய்திகள்
சூரிய மின்வேலி அமைப்பதை முறைப்படுத்துவது குறித்து கருத்தரங்கு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

சூரிய மின்வேலி அமைப்பதை முறைப்படுத்துவது குறித்து கருத்தரங்கு

தினத்தந்தி
|
28 July 2023 2:00 AM IST

சூரிய மின்வேலி அமைப்பதை முறைப்படுத்துவது குறித்து கருத்தரங்கு

வால்பாறை

தமிழகத்தில் யானைகள் உள்பட வனவிலங்குகளின் வழித்தடங்களில் சூரிய மின்வேலி அமைப்பதை முறைப்படுத்த வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில் வால்பாறை அருகே அட்டகட்டியில் உள்ள வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் கோவை, திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி கோட்ட வனச்சரகர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் இயற்கை வனவள பாதுகாப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர் கணேஷ் ரகுராம் பேசும்போது, யானைகள் வழித்தடங்களில் சூரிய மின்வேலி அமைப்பதன் மூலம் அவை வேறு வழித்தடங்களை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்படும். எனவே தவிர்க்க முடியாத இடங்களில் மட்டுமே சூரிய மின்வேலி அமைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து உலகளாவிய நிதிய மையத்தின் ஆராய்ச்சியாளர் ரவிக்குமார், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயராகவன் ஆகியோர் பேசினர். மேலும் ஏற்கனவே சூரிய மின்வேலி அமைக்கப்பட்டு உள்ள பகுதிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இது தவிர சூரிய மின்வேலி அமைப்பது குறித்த செயல்விளக்கம் நடந்தது. முடிவில் பயிற்சி மையத்தின் வனச்சரகர் புகழேந்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்