கரூர்
சிறுதானியங்கள் தயாரிப்பு குறித்த கருத்தரங்கு
|சிறுதானியங்கள் தயாரிப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது.
தோகைமலை அருகே உள்ள புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக உலக உணவு தினத்தை முன்னிட்டு சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்து கருத்தரங்கம் நடந்தது. உழவர் பயிற்சி நிலையத்தின் வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) கலைசெல்வி தலைமை தாங்கினார். வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுனர் தமிழ்செல்வி வரவேற்று பேசினார்.கரூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பயிர் மரபியல் துறை பேராசிரியர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி திரவியம் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி சிவா, கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் பயிற்சி நிலையத்தின் பேராசிரியர் அமுதா, விவசாயிகள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.