நாகப்பட்டினம்
இறால் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம்
|கீழையூர் அருகே இறால் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.
வேளாங்கண்ணி:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சார்பில் இறால் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கான கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கிற்கு இந்திய இறால் விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட இறால் வளர்ப்பு விவசாய சங்க பொருளாளர் ரவிக்குமார், எஸ்.எஸ்.மணியம், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறால் வளர்ப்பதில் நிகழ்கால சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள், இறால் வளர்ப்பில் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவதற்கான பண்ணை மேலாண்மை செயல்பாடுகள், இறால் வளர்ப்பில் தடை செய்யப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சி.ஏ.ஏ. சட்ட விதிகள்பற்றி தமிழ்நாடு மீன் வளர்ப்பு பல்கலைக்கழக உதவிபேராசிரியர் ஆனந்த், கடல் பொருள் ஏற்றுமதி உதவி இயக்குனர் பாண்டியராஜன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்ந்த ஜெயராஜ் ஆகியோர் விளக்கி பேசினர். கருத்தரங்கில் துணை கலெக்டர் மதியழகன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைஇணை இயக்குனர் இளம்வழுதி, நாகை மாவட்ட இறால் வளர்ப்பு விவசாய சங்கத்தின் தலைவர் சிதம்பரம், செயலாளர் சிவசங்கரன் மற்றும்நாகை மாவட்ட இறால் வளர்ப்பு விவசாய சங்கத்தினர்கள் கலந்துகொண்டனர்.