< Back
மாநில செய்திகள்
சென்னை: வெளிநாட்டு திருமணங்களில் இந்திய பெண்களின் உரிமைகள் குறித்த கருத்தரங்கம்
சென்னை
மாநில செய்திகள்

சென்னை: வெளிநாட்டு திருமணங்களில் இந்திய பெண்களின் உரிமைகள் குறித்த கருத்தரங்கம்

தினத்தந்தி
|
25 Sept 2022 7:45 AM IST

தமிழ்நாடு போலீஸ் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் இணைந்து, வெளிநாட்டு திருமணங்களில் இந்திய பெண்களின் உரிமைகள் தொடர்பான கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது.

தமிழ்நாடு போலீஸ் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் இணைந்து, வெளிநாட்டு திருமணங்களில் இந்திய பெண்களின் உரிமைகள் தொடர்பான கருத்தரங்கை நேற்று நடத்தின.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் சம்பு கல்லோலிகர், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டி.ஆர்.கே.வன்னியபெருமாள், மாநில மகளிர் ஆணைய நிர்வாகி ஏ.எஸ்.குமாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

3 அமர்வுகளாக நடைபெற்ற இந்த கருத்தரங்கில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசும்போது, 'தமிழகத்தில் பல்வேறு பிரசாரங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் மாநில போலீஸ் துறை தொடர்ந்து கவனம் செலுத்துகிறது' என்றார்.

மேலும் செய்திகள்