< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளியில் கணினி தமிழ் கருத்தரங்கம்
திருவாரூர்
மாநில செய்திகள்

அரசு பள்ளியில் 'கணினி தமிழ்' கருத்தரங்கம்

தினத்தந்தி
|
1 Sept 2023 12:30 AM IST

அரசு பள்ளியில் ‘கணினி தமிழ்’ கருத்தரங்கம் நடந்தது.

மன்னார்குடி அரசு கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் கணினி தமிழ் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ராசசேகரன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராசுப்பிள்ளை, நகரசபை உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்லே மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் கலந்துகொண்டு கணினி தமிழ் கலைச்சொல்லாக்கம் எனும் தலைப்பில் பேசினார். இதற்கான ஏற்பாடுகளை இலக்கிய மன்ற செயலாளர் ராசகணேசன் செய்திருந்தார். முடிவில் பட்டதாரி தமிழ் ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்