< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
தென்னை ஆராய்ச்சி பண்ணையில் கருத்தரங்கம்
|2 March 2023 12:15 AM IST
வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி பண்ணையில் கருத்தரங்கம்
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே வேப்பங்குளத்தில் உள்ள தென்னை ஆராய்ச்சி பண்ணையில் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடந்தது. கொச்சியில் முந்திரி மற்றும் கோகோ அபிவிருத்தி இயக்குனரகம் நிதி உதவியுடன் இந்த கருத்தரங்கம் நடந்தது. தென்னை ஆராய்ச்சி பண்ணை தலைவர் பாபு, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். மத்திய தோட்ட பயிர் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி எலைன் அப்சரா கலந்து கொண்டு கோகோ ரகங்கள் மற்றும் அவற்றை சாகுபடி செய்யும் முறை குறித்து விளக்கம் அளித்தார். இதில் கோகோ பயிர் தொடர்பான கையேடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.