< Back
மாநில செய்திகள்
நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் கருத்தரங்கம்
திருவாரூர்
மாநில செய்திகள்

நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் கருத்தரங்கம்

தினத்தந்தி
|
23 March 2023 12:15 AM IST

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் கருத்தரங்கம்


திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். இதில் நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். கருத்தரங்கின் போது நலத்திட்ட உதவிகள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து நடந்த கட்டுரை, கவிதை, ஓவியம் மற்றும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஹாசில்தீனுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். கருத்தரங்கில் அயோடின் உப்பு கண்டறியும் பரிசோதனை முறை, கலப்படத்தை கண்டறிவதற்காக காபி தூள் மற்றும் மஞ்சள் தூள்களை பார்வைக்காக வைத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் மற்றும் அரசு அலுவலர்கள், நுகர்வோர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்