< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
கலை, அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்
|14 Oct 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் கலை, அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துறை தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ஏழுமலை, தாளாளர் பழனிராஜ், துணை தலைவர் முஸ்டாக் அகமது, முன்னாள் தாளாளர் கல்யாணசுந்தரம், முதல்வர் நாராயணன், துணை முதல்வர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். அண்ணாமலை பல்கலைக்கழகம் முதுகலை விரிவாக்க மைய முனைவர் சத்தியமூர்த்தி கலந்து கொண்டு இலக்கமுறை படம் செயலாக்கம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை கணினி பயன்பாட்டியல் பேராசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் பேராசிரியர் குணசேகர் நன்றி கூறினார்.