கள்ளக்குறிச்சி
கலை அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்
|திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரியில் இயற்பியல் மற்றும் வேதியியல்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கல்லூரியின் தலைவரும், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவருமான ஆர். செல்வராஜ் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இயற்பியல் துறை தலைவர் சந்திரசேகர் வரவேற்றார். முன்னாள் தாளாளர் கல்யாணசுந்தரம், முதல்வர் நாராயணசாமி, துணை முதல்வர் டாக்டர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தென்கொரியாவை சேர்ந்த நேஷனல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் செந்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை வேதியியல் துறை மற்றும் இயற்பியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வேதியியல் துறை தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.