< Back
மாநில செய்திகள்
தேவகோட்டையில் கருத்தரங்கம்
சிவகங்கை
மாநில செய்திகள்

தேவகோட்டையில் கருத்தரங்கம்

தினத்தந்தி
|
15 Oct 2023 12:15 AM IST

தேவகோட்டையில் கருத்தரங்கம் நடந்தது.

தேவகோட்டை,

தேவகோட்டை ஆனந்தா கல்லூரி தமிழ்த்துறை, சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய மன்றம், மதுரை நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் லிமிட் இணைந்து தொ.மு.சி. ரகுநாதன் இலக்கிய படைப்புகள் மற்றும் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர் தர்மராஜ் வரவேற்றார். கல்லூரி செயலர் செபாஸ்டியன் தலைமையுரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் ஜான் வசந்தகுமார் ஆசியுரை வழங்கினார்.

தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற மாவட்ட செயலாளர் முருகன் கருத்தரங்கின் நோக்கவுரை நிகழ்த்தினார். தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற மாநில பொதுச்செயலாளர் அறம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மாவட்ட தலைவர் பழனியப்பன் தொடக்கவுரை ஆற்றினார்.

கல்லூரி துணை முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், புலமுதன்மையர் டென்சிங்ராஜன், மருத்துவர் ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரியின் உதவிப்பேராசிரியர் கீதா, பல்துறைக்கலைஞர் பூபதி, சருகணி இதயா மகளிர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் ராமேஸ்வரி ஆகியோர் பேசினர். தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற மாவட்ட பொருளாளர் மதிவாணன் நன்றி கூறினார். நிகழ்வில் தேவகோட்டை தெய்வசிகாமணி, கவிஞர் மணிபாரதி, தேவகோட்டை தமிழ் அமைப்புகளின் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், கலந்துகொண்டனர். ஏற்பாட்டினை தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற சிவகங்கை மாவட்டம் மற்றும் ஆனந்தா கல்லூரி, தமிழ்த்துறை தலைவர் தர்மராஜ் ஆகியோர் செய்திருந்தனார்.

மேலும் செய்திகள்