< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
கருத்தரங்கம்
|18 March 2023 12:45 AM IST
கருத்தரங்கம் நடைபெற்றது
மதுரை
மதுரை யாதவர் கல்லூரி சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறையின் சார்பில் உன்னால் முடியும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை இலக்கிய பேரவையின் தலைவர் பட்டிமன்ற நடுவர் சண்முக. திருக்குமரன் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார். சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறை தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் நாராயணன் தலைமை தாங்கி பேசுகையில் விடா முயற்சி மிகப்பெரும் வெற்றி என்பதனை மாணவர்களிடையே எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் மாணவி சுபாஷினி நன்றி கூறினார். கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் சம்யபாமா, வீரபாண்டியன், பாஸ்கரன், அற்புதராணி, ராமநாதகோபாலன், சந்தனமாரி, வித்யா மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.