விருதுநகர்
கருத்தரங்கம்
|ுயதொழில் பயிற்சிகள் குறித்த கருத்தரங்கம் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில் கிராமப்புற பெண்கள் பொருளாதார வாழ்வை மீட்டெடுக்கும் வகையில் சுயதொழில் பயிற்சிகள் குறித்த கருத்தரங்கம் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு துணைத்தலைவர் சசி ஆனந்த் தலைமை தாங்கினார். துணைவேந்தர் நாராயணன் முன்னிலை வகித்தார். பதிவாளர் வாசுதேவன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கிராமப்புறத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சுய தொழில் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பெண்கள் கைவினைப் பொருட்கள், நெசவு மற்றும் வாழை மூங்கில் கொண்டு பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் அவர்களின் வேலை வாய்ப்பு பெருக்க மானியத்தின் மூலம் கடன் உதவி வழங்குவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரஜினி, முத்து கண்ணன், முகமது, கண்ணன் மற்றும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை செய்திருந்தது.