விருதுநகர்
கருத்தரங்கம்
|மகளிர்தினத்தையொட்டி கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது.
விருதுநகர் நோபிள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் விருதுநகர் கிங்டம் ரோட்டரி சங்கம் சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கருத்தரங்கம் நடைபெற்றது. ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பெண்களை பற்றி ஆளுமை மகளிர் அன்றும், இன்றும் என்ற தலைப்பில் கல்லூரி மாணவிகள் சிறப்புரையாற்றினர். நோபிள் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் ஜெரால்டு ஞானரத்தினம் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். புலவர் ராஜேந்திரனார் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். கல்லூரி முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். ரோட்டரி சங்க செயலாளர் வரதராஜ் நன்றி கூறினார். கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. மல்லாங்கிணறு வே.தங்கபாண்டியன் நினைவு அரசு பொது நூலகத்தில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. நல்லாசிரியர் சங்கரவேலு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு நூலக ஆய்வாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் துளசிதாஸ் கலந்து கொண்டார். பேராசிரியை கமலா மற்றும் கவிஞர் மஞ்சுளா ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் நூலகர் குணசேகரன் நன்றி கூறினார். விருதுநகர் யூனியன் கூரைக்குண்டு பஞ்சாயத்து சார்பில் விருதுநகரில் உள்ள தனியார் திருமண அரங்கில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்ற விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ சுலோச்சனா சிறப்புரையாற்றினார். இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.