< Back
மாநில செய்திகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம்
சிவகங்கை
மாநில செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம்

தினத்தந்தி
|
5 March 2023 12:15 AM IST

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது.

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி வேதியல் துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளம் குன்ற வளர்ச்சி அடைதலில் வேதியியலின் பங்கு என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் துரையரசன் தலைமையில் நடைபெற்றது. வேதியல் துறை உதவி பேராசிரியர் செல்வ பாண்டியன் வரவேற்று பேசினார். வேதியல் துறை தலைவர் சிரில் நோக்க உரையாற்றினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மணிசங்கர் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் வாசுதேவன், விலங்கியல் துறை தலைவர் அழகுசாமி, வரலாற்றுத்துறை தலைவர் கலைச்செல்வி, காரைக்குடி சிக்கிரி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் சதீஷ் மற்றும் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினா். கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், அறிவியல் அறிஞர்கள், முதுநிலை ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்