சிவகங்கை
மாநில அளவிலான கருத்தரங்கம்
|தேவகோட்டை ஆனந்தா கல்லூரி இயற்பியல்துறை சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
தேவகோட்டை
தேவகோட்டை ஆனந்தா கல்லூரி இயற்பியல்துறை சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான இயற்பியல் சார்ந்த போட்டிகள் கல்லூரியின் முதல்வர் ஜான் வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி செயலர் சேசுராஜ் கே.கிறிஸ்டி முன்னிலை வகித்தார். இயற்பியல் துறைத்தலைவர் லொயோலா பவுல்ராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருச்சி தூய வளனார் கல்லூரியின் இயற்பியல் துறைத்தலைவர் ரவி கலந்து கொண்டு பேசினார். மற்றொரு சிறப்பு விருந்தினராக கரூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியின் இயற்பியல் துறைப் உதவிப்பேராசிரியர் சகாயடெனிஸ்பாபு, திருச்சி தூய வளனார் கல்லூரியின் இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் ஜாய்பிரபு, ஆசிரியர் ஆல்பர்ட் மனோகரன் ஆகியோர் பேசினர். பேராசிரியை நான்சி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை இயற்பியல் துறைத்தலைவர் லொயோலா பவுல்ராஜ், உதவிப்பேராசிரியர்கள் திருமாமகள், நான்சி, அசோகன் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.