< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கருத்தரங்கம்
|21 Jan 2023 1:57 AM IST
நெல்லையில் கருத்தரங்கம் நடந்தது.
நெல்லை சாரதா மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில், ஒமேகா மன்றத்தில் விருந்தினர் விரிவுரை கருத்தரங்கம் நடைபெற்றது. மன்ற பொறுப்பாளர் முத்துராணி வரவேற்றார். கல்லூரி முதல்வர் கமலா தலைமை தாங்கினார். நெல்லை சாராள் தக்கர் கல்லூரியின் இயற்பியல் துறை இணை பேராசிரியர் ஜெயமங்களம், "ஒப்ளேக் மந்திர மண் பற்றிய இயற்பியல்" என்ற தலைப்பின் கீழ் பேசினார். இதில் இயற்பியல் துறை தலைவர் மகரஜோதி லட்சுமி உள்பட அனைத்து பேராசிரியர்களும், மாணவிகளும் கலந்துகொண்டனர். மாணவி சரண்யா நன்றி கூறினார். மாணவிகள் ஹரிதா, ஸ்ரீமீரா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.