< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
சாலை பாதுகாப்பு கருத்தரங்கம்
|12 Jan 2023 12:15 AM IST
சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
ராமநாதபுரம் வேலுமனோகரன் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி விழிப்புணர்வு கருத்தரங்கம் தாளாளர் வேலுமனோகரன் தலைமையில் நடைபெற்றது. துணை தாளாளர் பார்த்தசாரதி, செயலாளர் சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் காஞ்சனா வரவேற்றார். தலைகவசம் அணிய வேண்டும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று மாணவிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. பாதுகாப்பு ஆலோசகர் பெரியசாமி உள்பட பலர் பேசினர். பேராசிரியர் மலர்விழி நன்றி கூறினார்.