< Back
மாநில செய்திகள்
சர்வதேச கருத்தரங்கம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

சர்வதேச கருத்தரங்கம்

தினத்தந்தி
|
22 Dec 2022 12:15 AM IST

சர்வதேச கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழக்கரை,

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கீழக்கரை ஐ.சி.டி. அகாடமி மற்றும் இந்திய உணவுக் கழகம் இணைந்து வாழ்க்கை அறிவியல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான வணிக நடைமுறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சி என்ற தலைப்பிலான ஒருநாள் சர்வதேச கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்றார். கல்லூரியின் தாளாளர் மருத்துவர் ரக்மத்துன்னிசா அப்துர்ரகுமான் இணைய வழி மூலம் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக துபாய் ஈமான் பொதுசெயலாளர் ஹமீதுயாசின் கலந்துகொண்டார். கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் தொழில் நிறுவனத்தொடர்பு இயக்குனர் எம்.எஸ்.இர்பான் அகமது குறிப்புரை வழங்கினார். பின்னர் பல்வேறு கருப்பொருள்களின் அடிப்படையிலான 6 தொழில்நுட்ப அமர்வுகள் நடத்தப்பட்டன. ஐக்கிய நாட்டின் லண்டன் உணவு ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பல்கலைக்கழகத்தின் துணை இயக்குனரும் நியுட்ரிஜெனிடிக்ஸ் பேராசிரியருமான முனைவர் விமல்கரணி, மலேஷியாவின் துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் அண்டோ கோர்டெலியா டிரானிஸ்லாஸ் ஆண்டனி, வங்காள தேச ஊட்டச்சத்து மற்றும் உணவு அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் கலிதா இஸ்லாம், ஜப்பானின் டோஹோகு பல்கலைக்கழக பேராசிரியர் யோஷிகி கவாசோ, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் எஸ்.எல்.ஐ.டி. வர்த்தகப் பள்ளியின் இணை முதன்மையர் கலாநிதி நாகலிங்கம், நாகேந்திர குமார், சூஸ் துனிசியா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஹம்தி ஹசன் தலைமை தாங்கி பேசினர். மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் வருண் குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ஊட்டச்சத்து துறையின் தலைவர் முனைவர் முத்து மாரீஸ்வரி நன்றி கூறினார். பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்லூரிகளின் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொதுமேலாளர் சேக் தாவூத் கான், பேராசிரியர்கள், கல்லூரி பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்