< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
குடும்ப முன்னேற்றம் குறித்த கருத்தரங்கம்
|27 Nov 2022 12:15 AM IST
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் குடும்ப முன்னேற்றம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
ராசிபுரம்
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் உள்ளூர் புகார் குழு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குழுவின் சார்பில் குடும்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவது ஆண்களா பெண்களா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பங்காரு நடுவராக இருந்தார். ஆண்கள் அணியில் மாணவர்கள் லாலு, சையத், அமீருல்லா, கவுரிசந்திரன், கலையரசன் ஆகியோரும், பெண்கள் அணியில் சுகுணா, சரண்யா, ஜீவிதா, ஜெயந்தி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.