< Back
மாநில செய்திகள்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கம்
சிவகங்கை
மாநில செய்திகள்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கம்

தினத்தந்தி
|
23 Nov 2022 12:15 AM IST

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் நடைபெறுகிறது.

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவலியல் துறை சார்பாக உயிரி தகவலியல் கட்டமைப்பு மற்றும் கணினி சார்பு மருந்து கண்டறிதல், நவீன உத்திகள் வளர்ச்சிகள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் 5 நாட்கள் பல்கலைக்கழக அறிவியல் வளாக கூட்டரங்கில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவுக்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி தலைமை தாங்கினார். வேலூர் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை தலைவர் சேகர் விஸ்வநாதன் தொடக்க உரையாற்றினார். புதுடெல்லி அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் டி.பி.சிங், திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.

ஜப்பான் பல்கலைக்கழக பேராசிரியர் அஹியோ எபிஹாரா பெரும்பாலான உயிரியல் சிக்கல்களை உயிரி தகவலியல் மூலம் தீர்க்க முடியும். புரதச்செயல்பாடு மற்றும் நொதி வினையூக்கம் பற்றிய கட்டமைப்பு அடிப்படையிலான புரிதல், பயோ மார்க்கர் ஸ்களின் பராமரிப்பு பரிசோதனை வளர்ச்சி குறித்து விளக்கினார். சென்னை ஏ.எம்.இ.டி. பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முதன்மை பேராசிரியர் வேல்முருகன், அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழு உறுப்பினர் சுவாமிநாதன், அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவலியல் துறையின் தலைவர் பேராசிரியர் ஜெயகாந்தன் ஆகியோர் பேசினர். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி கருத்தரங்க மலரை வெளியிட்டார். தொடர்ந்து அமைப்பின் 2-வது செய்தி மலரை அதன் தலைவர் பேராசிறியர் டி.பி.சிங் வெளியிட்டார். சிறந்த தகவல்கள் அளித்த 5 பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்