மதுரை
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
|குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
அலங்காநல்லூர்
பாலமேடு பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. கூட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுப்பது, குழந்தை தொழில் செய்வதை நிறுத்துவது, கொரோனா காலத்தில் தாய்தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மற்றும் நிதியுதவி பெறுவது, ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி வசதி செய்துதருவது, குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமையிலிருந்து தடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டியும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவது பற்றி கலந்தாய்வுக்கூட்டத்தில் விளக்கி கூறப்பட்டது. பேரூராட்சி மன்றத்தலைவர் சுமதி பாண்டியராஜன், தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராமராஜ், அனைத்து வார்டு உறுப்பினர்கள், செயல் அலுவலர் தேவி முன்னிலை வகித்தனர். பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், மருத்துவ ஆய்வாளர்கள், சுயஉதவிக்குழு செயலாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இளநிலை உதவியாளர் கிரண்குமார் நன்றி கூறினார்.