சிவகங்கை
தேசிய கருத்தரங்கம்
|தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கலைக்கல்லூரியில் வங்கியியல் தொழில்நுட்பம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கலைக்கல்லூரியில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் வங்கியியலில் தொழில் நுட்பம் எனும் தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் கேப்டன் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி துணை தலைவர் ராமேஸ்வரன், செயலர் ஆறுமுகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக வணிகவியல் துறைத்தலைவர் அழகப்பன் வரவேற்றார்.
இக்கருத்தரங்கில் வணிகவியல் துறை மாணவ, மாணவிகளுக்கு வங்கியியல் தொழில்நுட்பம குறித்த விளக்கவுரை தொடுதிரை மூலம் எடுத்துக் கூறப்பட்டது. இதில், கல்லூரி துணை முதல்வர் சூசைமாணிக்கம், சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜமாணி்க்கம், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், மற்றும் வணிகவியல் துறை பேராசிரியர்கள், தொழில் பிரிவு பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாண்டிதேவி, உதவி பேராசிரியர் நிர்மலா ஆகியோர் செய்திருந்தனர்.