காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூலக மற்றும் தகவல் அறிவியல் கல்வித்துறையில் தற்போது நிகழ்ந்து வரும் மாற்றங்கள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம், பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், நவீன தொழில்நுட்பம் ஆராய்ச்சிக்கு தேவையான சரியான ஆதாரங்களை தேர்வு செய்வதற்கு பெரிதும் உதவி புரிகிறது. நூலகம் ஒரு கல்வி நிறுவனத்தில் இதயம் போன்றது. அழகப்பா பல்கலைக்கழக மைய நூலகத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 67 அச்சிடப்பட்ட நூல்களும், 2 ஆயிரத்து 259 ஆய்வறிக்கைகள், 132 தேசிய மற்றும் சர்வதேச இதழ்களும் உள்ளன. இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. மாணவர்கள் அலைபேசி பயன்பாட்டை குறைத்து நூலகங்களுக்கு சென்று வாசிப்பை அதிகரித்து அறிவை மேம்படுத்த வேண்டும் என்றார்.
மிசோரம் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் பிரவாகர்ராத், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் சாதிக் பாட்ஷா சுஸ்கியோர் சிறப்புரையாற்றினர். ஆய்வு கட்டுரைகள் அடங்கிய ஆய்வேட்டை துணை வேந்தர் பேராசிரியர் ரவி வெளியிட பேராசிரியர் பிரவாகர் ராத் பெற்றுக்கொண்டார். முன்னதாக கருத்தரங்கின் அமைப்பாளர் பேராசிரியர் தனுஷ்கோடி வரவேற்றார்.