< Back
மாநில செய்திகள்
கருத்தரங்கம்
சிவகங்கை
மாநில செய்திகள்

கருத்தரங்கம்

தினத்தந்தி
|
17 Aug 2022 10:14 PM IST

விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பெத்தாலட்சுமி தலைமை தாங்கினார். கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் திட்ட அலுவலர் வேலாயுத ராஜா வரவேற்றார். காரைக்குடி தம்பிரான் மருத்துவமனை டாக்டர் சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் குறித்தும் பேசினார். யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு வென்ற மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் அனைவரும் முதல்வர் பெத்தாலட்சுமி தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். முடிவில் யூத் ரெட் கிராஸ் அமைப்பு மாணவ செயலாளர் சம்பத்லிங்கம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்