< Back
மாநில செய்திகள்
கருத்தரங்கம்
விருதுநகர்
மாநில செய்திகள்

கருத்தரங்கம்

தினத்தந்தி
|
25 Sept 2023 2:44 AM IST

சமூக பொருளாதார பாலின சமத்துவத்தை வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர் ஒன்றியம் சார்பில் வைக்கம் 100 வள்ளலார் 200 என்ற தலைப்பில் சமூக பொருளாதார பாலின சமத்துவத்தை வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி தலைமை தாங்கினார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாலபாரதி, கட்சியின் மாநில குழு உறுப்பினர் சுகந்தி ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதில் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாவட்ட குழு உறுப்பினர் திருமலை, நகர செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்