< Back
மாநில செய்திகள்
அரூரில்பொது சிவில் சட்ட கருத்தரங்கு
தர்மபுரி
மாநில செய்திகள்

அரூரில்பொது சிவில் சட்ட கருத்தரங்கு

தினத்தந்தி
|
12 Sept 2023 1:00 AM IST

அரூர்:

அரூரில் சேலம் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் அரூர் அஹ்லே சுன்னத்வல் ஜமாத் இணைந்து பொது சிவில் சட்டம் குறித்த கருத்தரங்கை நடத்தின. இதற்கு மாவட்ட பொருளாளர் இதாயத்துல்லா வரவேற்றார். மாவட்ட தலைவர் சுபேதன் தலைமை தாங்கினார். த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பொது சிவில் சட்டம் குறித்து பேசினார். இதில் தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், த.மு.மு.க. மாநில செயலாளர் அஸ்தாப் அகமத், தலைமை பிரதிநிதி சாதிக்பாஷா, முத்தவல்லி சபீர்அகமத், செயலாளர் அப்துல்ரவூப், பொருளாளர் அப்துல்ரகுமான், தர்கா கமிட்டி தலைவர் அலாவுதீன் பாட்சா, தி.மு.க. நகர செயலாளர் முல்லைரவி, ஒன்றிய செயலாளர்கள் சவுந்தரராஜன், சந்திரமோகன், கலைவாணி, மாநில செயற்குழு உறுப்பினர் இர்பான்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் முகமதுரபிக் நன்றி கூறினார். கருத்தரங்கில் இந்திய பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில் உள்ள பொது சிவில் சட்டம் கொண்டு வர முற்படும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழ்நாடு அரசு 49 வாழ்நாள் சிறைவாசிகளை 151-ம் பிரிவின் கீழ் விடுதலை செய்ய அளித்துள்ள பரிந்துரைக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்