சேலம்
ஆத்தூரில் நாட்டு வைத்தியர்கள் கருத்தரங்கம் கலெக்டர் கார்மேகம் பங்கேற்பு
|ஆத்தூரில் நாட்டு வைத்தியர்கள் கருத்தரங்கம் கலெக்டர் கார்மேகம் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
சேலம்
ஆத்தூரில் நடைபெற்ற நாட்டு வைத்தியர்கள் கருத்தரங்கில் கலெக்டர் கார்மேகம் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
நாட்டு வைத்தியர்கள் கருத்தரங்கம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் வனக்கோட்டம் சார்பில் 'நாட்டு வைத்தியர்கள் கருத்தரங்கம்' ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வனத்துறை மற்றும் ஜப்பானின் 'ஜிகா' நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தி உள்ளன. தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விட மேம்பாடு பாதுகாத்தல், காடு வளர்ப்பு மற்றும் நிறுவன திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் பல்லுயிர் பாதுகாப்பை மேம்படுத்துவது இந்த கருத்தரங்கின் நோக்கம் ஆகும்.
பொருளாதார வளர்ச்சி
இதன் மூலம் தமிழ்நாட்டின் இயற்கையுடன் இணக்கமான சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதும் ஆகும். மேலும், பழங்குடியினர் மற்றும் உள்ளூர் மக்களிடையே பாரம்பரிய அறிவை பாதுகாப்பதற்கும் இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த கருத்தரங்கில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டு வைத்தியர்கள், வன அலுவலர் சுதாகர் உள்பட வன அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.